ஆக்சனில் மிரட்டும் நடிகர் சூர்யா! ரசிகர்களுக்கு இயக்குனர் சிவா கொடுக்கும் மாஸ் விருந்து.!

ஆக்சனில் மிரட்டும் நடிகர் சூர்யா! ரசிகர்களுக்கு இயக்குனர் சிவா கொடுக்கும் மாஸ் விருந்து.!


surya-action-fight-with-50-stunt-master-in-next-movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யாவின் 42வது படத்தை இயக்குனர் சிவா இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். இப்படம் 13 மொழிகளில் திரையிட உள்ளதாக படக்குழுவினர் தரப்பில் கூறப்படுகிறது. 

சூர்யா 42 திரைப்படம் இரண்டு பாகங்களாக படமாக்கப்பட உள்ள நிலையில் முதல் பாகத்தை விரைவில் முடிக்க இயக்குனர் சிவா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் வசன காட்சிகள் முடிவு பெற்ற நிலையில் தற்போது ஆக்சன் காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது  

படத்தில் ஒரு சண்டைகாட்சி 50 ஸ்டன்ட் கலைஞர்ளுடன் உடற்பயிற்சி கூடத்தில் சூர்யா மோதுவது போல மிகவும் அதிரடியாக படமாக்கப்பட்டுள்ளதாம். மேலும்  மற்றொரு சண்டை காட்சி விமான வடிவில் ஒரு செட் அமைக்கப்பட்டு  அதற்குள் சண்டைபோடுவது போன்று பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருவதாக படக்குழுவினர் தரப்பில் கூறப்படுகிறது. இந்த மாஸ் விருந்திற்காக ரசிகர்கள் பெரும எதிர்பார்ப்பில் உள்ளனர்.