சினிமா

அவர் எல்லாருக்கும் முன்னே என் இடுப்பை கிள்ளினார், பிரபலத்தின் மீது பாலியல் புகார் அளித்த தொகுப்பாளினி ஸ்ரீ ரஞ்சனி.! யார் தெரியுமா?

Summary:

sri ranjani sex abuse complaint on kadam umashankar

 விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான ஸ்ரீரஞ்சனி கடம் உமாசங்கர் மீது அதிரடிய௭யாக பாலியல் புகார் தெரிவித்துள்ளார். மீ டூ இயக்கம் சூடுபிடித்துள்ள நிலையில் நடிகைகள் மற்றும் பெண்கள் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை தைரியமாக வெளியிட்டு வருகின்றனர்.இதில் பல பிரபலங்களும் சிக்கி வருகின்றனர். 

இந்நிலையில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்து வரும் அமித் பார்கவின் மனைவியும்,விஜய் டிவி தொகுப்பாளருமான ஸ்ரீ ரஞ்சனி கடம் உமா ஷங்கர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.


அதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
கடம் உமா சங்கருடன் எனக்கும் மீ டூ சம்பவம் நடந்தது. ஆதாரம் கேட்பவர்களே இது பட்டப்பகலில் என் அலுவலகத்தில் சக ஊழியர்கள் கண்முன்னே நடந்தது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு தான் நான் முதன்முதலாக உமாசங்கரிடம் பேசினேன். அப்போது நான் ஆர்.ஜே.வாக இருந்தேன். அவர் என் ரேடியோ ஸ்டேஷனுக்கு விருந்தினராக வந்தார். என் செல்போன் எண்ணை வாங்கி எனக்கு ஸ்வீட்டி என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி மெசேஜ் அனுப்பினார். அதை நான் கண்டுகொள்ளவில்லை.

7 ஆண்டுகள் கழித்து நான் டிஜிட்டல் மீடியா நிறுவனத்தில் வேலை செய்தபோது யூடியூப் சார்ந்த ப்ராஜெக்ட் தொடர்பாக அவர் அங்கு வந்தார். என்னை கடந்து சென்றபோது என் இடுப்பில் கிள்ளினார். இது 15 பேர் முன்பு நடந்தது. இது தான் உண்மையான தொல்லை. சம்பவம் நடந்தபோது அங்கிருந்த ஆண்களும் என்னை போன்றே அதிர்ச்சி அடைந்தார்கள். அதில் இருந்து அவர் தொடர்பான ப்ராஜெக்டுகளில் நான் வேலை செய்வதை தவிர்த்தேன். அதற்கு என் நிறுவனமும் சம்மதித்தது. ஆனால் அவர் கடவுள் பற்றியும், தான் ஒரு பக்திமான் என்றும் பேசுவது என்னை எரிச்சல் அடைய வைத்துள்ளது என்று ஸ்ரீ ரஞ்சனி தெரிவித்துள்ளார் .இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement