தமிழகம் சினிமா

இரட்டை பாப்பா வந்தாச்சு.. செம ஹேப்பியில் சூரி மற்றும் அவரது பிள்ளைகள் செய்த வேலையை பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ!!

Summary:

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் காமெடி நடிகராக அசத்தி தற

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் காமெடி நடிகராக அசத்தி தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் சூரி. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் சூரி தனது பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

நடிகர் சூரிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில் அவர் தனது வீட்டிற்கு இரட்டை பாப்பாக்கள் விருந்தினர்களாக வந்துள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அவரது வீட்டில் வளர்ந்து வந்த புறா ஒன்று இரட்டை குஞ்சுகளை பொரித்துள்ளது. அந்த வீடியோவை வெளியிட்ட சூரி கொரோனா விழிப்புணர்வு கருத்துகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் சூரி மற்றும் அவரது குழந்தைகள் இந்த உலகம் முழுவதும் பறவைகள், விலங்குகள் அனைத்திற்கும் சொந்தமானது. நாமதான் அதை அடித்து விரட்டிவிட்டு, காடுகளை அழித்து  வானுயர கட்டடங்களை கட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் தற்போது ஆக்சிஜனையே காசு கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை வந்துவிட்டது என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளனர். மேலும் சூரி இந்த உலகம், நமக்கானது மட்டுமல்ல. எல்லா உயிர்களுக்கும் சொந்தமானது எனவும் கூறியுள்ளார்.


Advertisement