சினிமா

நீங்கள் விரைவில் கைது செய்யப்படுவீர்கள் மை டியர்.! எச்சரிக்கும் சோனு சூட்!

Summary:

sonu sood warning to fake id

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதில் மிகவும் பிரபலமானார் பாலிவுட் நடிகர் சோனு சூட். இவர் கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள், ஏழை எளியவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவி செய்து வருகிறார்.

 ஏராளமான படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் சோனு சூட் கொரோனோவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தங்க தனது நட்சத்திர விடுதியை கொடுத்தார். மேலும் உணவின்றி தவிக்கும்  சுமார் 45 ஆயிரம் ஏழை மக்களுக்கு தினமும்  உணவு வழங்கி வருகிறார்.மேலும் தற்போது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்துவரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த செலவில் ஊர்களுக்கு அனுப்பிவைத்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் உதவி கேட்டு கோரிக்கை வைப்பவர்களுக்கும் உடனடியாக உதவி செய்து வருகிறார். அவரால் பலன் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் தனது பெயரில் ஒரு போலி ட்விட்டர் பக்கத்தைக் பார்த்த சோனு சூட், "மோசடி வியாபாரத்தை" நிறுத்துமாறு அந்த ஐடியை எச்சரித்துள்ளார். இதுகுறித்து சோனு சூட் தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில், “அப்பாவி மக்களை ஏமாற்றியதற்காக நீங்கள் விரைவில் கைது செய்யப்படுவீர்கள் மை டியர். அதற்கு முன்னதாக உங்கள் மோசடி வணிகத்தை நிறுத்திவிடுங்கள்’’ என்றார்.
 
 


Advertisement