சினிமா

தனது முன்னாள் கணவருக்கு நன்றி கூறிய நடிகை சோனியா அகர்வால்! ஏன் தெரியுமா?

Summary:

Sonia agarwal thank selvaragavan for kadhal konden movie

தமிழ் சினிமாவில் கடந்த 2003ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் காதல் கொண்டேன். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால்.  இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் நடித்தபோது சோனியா அகர்வாலுக்கும் இயக்குநர் செல்வராகவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது அதனைத் தொடர்ந்து இருவரும் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால்  இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2010ஆம் ஆண்டு பிரிந்தனர்.

இந்நிலையில் இப்படம் வெளியாகி தற்போது 17 ஆண்டுகள் ஆகிறது. அதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வந்தனர். இந்நிலையில் நடிகை சோனியா அகர்வால் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் இறைவனுக்கும், வசீகரிக்கும் தமிழ்நாட்டுக்கும், செல்வராகவன் மற்றும் திரு. கஸ்தூரிராஜாவுக்கு நன்றி, அற்புதமான ரசிகர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி 17 வருடங்கள் ஆகிவிட்டது. மேலும் தனுஷ் மற்றும் அப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் நன்றி. தமிழ் சினிமா இதுவரை காணாத, எந்தப் படத்துடனும் ஒப்பிட முடியாத ஒரு படம்தான் காதல் கொண்டேன் என பதிவிட்டுள்ளார்.

 


 


Advertisement