சினிமா

சினேகாவுடன் அடிக்கடி சண்டை, கருத்து வேறுபாடு.! முக்கிய நாளில் உண்மையை உடைத்த பிரசன்னா!!

Summary:

அடிக்கடி சண்டை, நிறைய கருத்து வேறுபாடு.. திருமண வாழ்க்கை குறித்து உருகிய பிரசன்னா!! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!

தமிழ் சினிமாவின் அழகிய, நட்சத்திர ஜோடிகளாக விளங்கி வருபவர்கள் சினேகா- பிரசன்னா. அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த போது அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து இருவரும் கடந்த 2012 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் சினேகா - பிரசன்னா தம்பதியினருக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர். சந்தோசமான ஜோடியாக விளங்கிவரும் அவர்கள் தற்போது தங்களது 10வது ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இந்த நிலையில் பிரசன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், இது எங்களது 10வது ஆண்டு திருமண நாள். இந்த 10 ஆண்டுகளும் அவ்வளவு எளிதாகவெல்லாம் கடந்துவிடவில்லை. நாங்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுள்ளோம். எங்களுக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் வந்துள்ளது.  நான் கொடுத்த வாக்குறுதிகளை மீறி, உங்களது இதயத்தை உடைய செய்துள்ளேன்.

ஆனாலும் எந்த சூழ்நிலையிலும் உங்களுக்கு என் மீது இருந்த அன்பு குறையவில்லை. உங்களது அன்பால் என்னை வென்று விடுகிறீர்கள். உங்களது அன்பைவிட தூய்மையானது எதுவும் இல்லை. எனது இதயத்தில் நீங்கள் நிரந்தரமான இடத்தைப் பிடித்துள்ளீர்கள். லவ் யூ கண்ணம்மா  என தெரிவித்துள்ளார். அது வைரலாகி வருகிறது.


Advertisement