டாப் நடிகர்களின் வெற்றிக்கு காரணம் இவர் தானா.? வெளியான தகவல்.!

டாப் நடிகர்களின் வெற்றிக்கு காரணம் இவர் தானா.? வெளியான தகவல்.!



Sj surya is the only reason for actors famous

1999ம் ஆண்டு வெளிவந்த அஜித்தின் "வாலி" படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ் ஜே சூர்யா.  தொடர்ந்து விஜயை வைத்து "குஷி" திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி வெற்றிபெற்றது.

Sjsurya

மேலும் எஸ் ஜே சூர்யா ஒரு இயக்குனராக மட்டுமின்றி, திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உள்ளார். 1988ம் ஆண்டில் வெளியான "நெத்தி அடி" படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார்.

அன்பே ஆருயிரே, நியூ, வியாபாரி, திருமகன் ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் எஸ் ஜே சூர்யா. சமீபத்தில் வெளியான விஷால் நடித்துள்ள "மார்க் ஆண்டனி" படத்திலும் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

Sjsurya

இந்நிலையில், மகேஷ் பாபுவின் "ஸ்பைடர்", விஜயின் "மெர்சல்", சிம்புவின் "மாநாடு", சிவகார்த்திகேயனின் "டான்", விஷாலின் "மார்க் ஆண்டனி" என்று முன்னணி நடிகர்களின் படத்தில், தன் மிரட்டலான நடிப்பினால் மக்களைக் கவர்ந்து, அப்படங்களையும் வெற்றி பெற வைத்துள்ளார், எஸ் ஜே சூர்யா.