சினிமா

தல அஜித் படத்தால் எழுந்த சிக்கல்! மீண்டும் போனிகபூருடன் மோதும் எஸ்.ஜே சூர்யா! அப்படி என்னதான் நடந்தது??

Summary:

தல அஜித் படத்தால் எழுந்த சிக்கல்! மீண்டும் போனிகபூருடன் மோதும் எஸ்.ஜே சூர்யா! என்னதான் நடந்தது??

கடந்த 1999ம் ஆண்டு அஜித் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்று செம ஹிட்டான திரைப்படம் வாலி. இப்படத்தின் மூலம் எஸ்.ஜே சூர்யா இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் அஜித்தின் திரைவாழ்க்கையில் முக்கியமான படங்களில் ஒன்று. இதில் அவர் ஹீரோ மற்றும் காது கேட்காத, வாய் பேச முடியாத வித்தியாசமான வில்லனாகவும் நடித்திருந்தார். 

அவ்வாறு தமிழில் மாபெரும் ஹிட் கொடுத்த வாலி படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை போனிகபூர் அதன் தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தியிடமிருந்து  பெற்றார். இந்த நிலையில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா, வாலி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய தனது அனுமதி வேண்டும் எனவும், படத்தை ரீமேக் செய்ய தடைவிதிக்க வேண்டுமெனவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் படத்தின் ரீமேக் உரிமையை போனி கபூர் பெற்றிருப்பதால் அதற்கு தடை கிடையாது என அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஆரண்ய காண்டம் படத் தயாரிப்பாளர்கள் மீது அப்பட இயக்குநர் தியாகராஜ குமாரராஜா வழக்கு தொடர்ந்தார். அப்போது படத்தின் டப்பிங் உரிமை தயாரிப்பாளருக்கு இருந்தாலும் ரீமேக் உரிமை கதை எழுதியவருக்கு உள்ளது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை மேற்கொள் காட்டி எஸ்.ஜே.சூர்யா மீண்டும் வழக்கை மேல்முறையீடு செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    


Advertisement