சினிமா

அட.. என்ன சிம்ரன் இப்படி ஆகிடீங்க! சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில், நியூ லுக் புகைப்படத்தை கண்டு செம ஷாக்கான ரசிகர்கள்!

Summary:

நடிகை சிம்ரன் தனது சால்ட் அன்ட் பெப்பர் லுக் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் என்ன சிம்ரன் இப்படி ஆயிட்டீங்களே என ஷாக்காகியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை சிம்ரன். இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சரத்குமார், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் ஹீரோக்களுக்கு இணையாக இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. தற்போதும் கூட நடிகை சிம்ரனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் அவரை மிஞ்சும் அளவிற்கு எந்த நடிகையும் கிடையாது எனலாம். இந்நிலையில் சில காலங்களுக்கு சினிமாவிற்கு இடைவெளி விட்ட சிம்ரன் கடந்த சில ஆண்டுகளாக தற்போது மீண்டும் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சினிமா பிரபலங்கள் பெரும்பாலும் தங்களது நரைமுடிகளை மறைப்பதற்காக கலரிங் செய்து கொள்வார்கள்.  ஆனால் நடிகர் அஜித் சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் பல படங்களில் நடித்ததை தொடர்ந்து பலரும் அதையே பின்பற்றி வருகின்றனர் இந்த நிலையில் நடிகை சிம்ரன் தற்போது தனது சால்ட் அன்ட் பெப்பர் லுக் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் என்ன சிம்ரன் இப்படி ஆயிட்டீங்களே என ஷாக்காகியுள்ளனர்.


Advertisement