அதிர்ச்சி.! விஷால் படத்தின் படப்பிடிப்பிற்கு சென்ற போது ஏற்பட்ட விபத்து.. விஷாலிற்கு என்ன ஆச்சி.?

அதிர்ச்சி.! விஷால் படத்தின் படப்பிடிப்பிற்கு சென்ற போது ஏற்பட்ட விபத்து.. விஷாலிற்கு என்ன ஆச்சி.?


Shooting van accident

நடிகர் விஷால் "செல்லமே" திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் இவர், தயாரிப்பாளராகவும் உள்ளார். இந்நிலையில் இவர் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் சமீபத்தில் நடைபெற்றது.

vishal

இதையடுத்து தற்போது காரைக்குடி பகுதியில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்தப் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்னையில் இருந்து புறப்பட்டு காரைக்குடி வந்துள்ளனர். இதில் படப்பிடிப்பு உபகரணங்கள் அடங்கிய வேன் ஒன்றும் அடங்கும்.

திருவண்ணாமலை சேத்துப்பட்டை சேர்ந்த நாதன்(23) என்பவர் ஓட்டி வந்த இந்த வேனில், ஓசூரை சேர்ந்த மகேஷ் (33), மற்றும் சென்னை சாலிக்ராமத்தை சேர்ந்த துரை(10) உள்ளிட்ட நான்கு பேர் பயணித்துள்ளனர்.  இந்நிலையில், தஞ்சாவூர் ரோட்டில் வந்துகொண்டிருந்தபோது வேன் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

vishal

ட்ரைவர் வேனை நிறுத்த முயற்சி செய்தும், கட்டுப்பாட்டை இழந்த வேன், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் உள்ளிருந்த 4 பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.