சினிமா பிக்பாஸ்

தர்சனின் மடியில் உட்கார்ந்து செரீன் செய்த காரியத்தை பார்த்தீங்களா.! லீக்கான நீக்கப்பட்ட காட்சிகள்!!

Summary:

sherin sit on dharshan lap in bigboss

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3ல் 16 போட்டியாளர்களில் ஒருவராக இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் என்பவர் கலந்து கொண்டுள்ளார். இவர் மிகவும் கஷ்டப்படக் கூடிய வறுமையான குடும்பத்தில் இருந்து தீராத முயற்சியால் முன்னேறி வந்தவர்.

தொடர்புடைய படம்

மேலும் தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் அன்புடன் பழக கூடியவர். மேலும் எவரைப் பற்றியும் புறம் பேசாமல்,  யார் வம்புக்கும் செல்லாமல் நேர்மையாக இருப்பவர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் தர்ஷன் மற்றொரு போட்டியாளரான நடிகை செரீனுடன் நெருங்கி பழகி வருகிறார். 

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நேற்று புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு,  கிராமத்தில் உள்ளது போல் இருக்க வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டது. இந்நிலையில் செரீன் மற்றும் தர்ஷனுக்கு கணவன்-மனைவி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. மேலும் மீராவிற்கு தர்ஷனின் அம்மாவாகவும்,  செரீனின்  மாமியாவுமான கதாபாத்திரம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த டாஸ்கை விறுவிறுப்பாக செய்து கொண்டிருந்த நிலையில் தர்ஷன் மற்றும் செரீன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். மேலும் செரீன் தர்சனின் மடியில் அமர்ந்து கொஞ்சி  பேசியுள்ளார். மேலும் தனக்கு பூவைத்து விடுமாறும் அவரை வற்புறுத்தியுள்ளார்.  

இந்த காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகாத நிலையில் அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட தர்சனின்  ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவரை ரசிகர்கள் தாறுமாறாக புகழ்ந்து வந்த நிலையில் தற்போது மோசமாக விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர்.