அடஅட.. என்ன ஒரு வளைவு நெளிவு.. டாப்பு டக்கரு பாடலுக்கு டக்கரா டான்ஸ் ஆடி அசத்தின மௌன ராகம் பேபி கிருத்திகா!



Serial baby Actress kritika dance video

மௌன ராகம் சீரியல் பேபி கிருத்திகாவின் அசத்தல் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

அந்தவகையில் கடந்த 2017ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மாபெறும் வரவேற்பை பெற்ற தொடர்களில் ஒன்று மௌனராகம். இதில் சக்தி என்ற காதபத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கிருத்திகா. இத்தொடர் குடும்பம், இசை என்ற கதையை மையமாக கொண்டு ஒளிப்பரப்பாகி முதல் பாகம் முடிவடைந்த நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகம் தொடங்கி விறுவிறுப்பாக சுவாரசியமாகவும் சென்று கொண்டுள்ளது.

சீசன் ஒன்றில் குட்டி குழந்தையாக நடித்த கிருத்திகா தற்போது பல்வேறு சினிமா படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிவருகிறார். அந்த வகையில் அவர் விஷால் நடிப்பில் வெளிவரவிருக்கும் சக்ரா திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதில் சீரியல் நடிகை நீலிமா ராணியின் மகளாக நடிக்கிறார் பேபி கிருத்திகா.

மேலும் சமூக வலைத்தலகளில் அவ்வப்போது புகைப்படம் மற்றும் டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது டாப்பு டக்கர் பாடலுக்கு மாஸ் லெவெலில் டான்ஸ் ஆடின வீடியோ ஒற்றை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட, இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.