சினிமா

சித்தி 2 சீரியல் நடிகை மகாலட்சுமிக்கு அடித்த அதிஷ்டம்! வைரல் புகைப்படம் இதோ...

Summary:

பிரபல மியூசிக் தொலைக்காட்சியான சன்மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியதன்

சித்தி சீரியல் 2 நடிகை மகாலக்ஷ்மி விரைவில் திரைப்படத்தில் நடிக்க உள்ள நிலையில், படத்திற்கு பூஜை போட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

சன்மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் மகாலஷ்மி. இதன் மூலம் இவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் சன் டிவியில் ஒளிப்பரப்பான தாமரை மற்றும் வாணி ராணி சீரியலிலும், ஜீ தமிழ் சேனலில் தேவதையை கண்டேன் சீரியலிலும் நடித்துள்ளார். தற்போது சன்டிவியில் ஒளிபரப்பாகும் ராதிகாவின் சித்தி 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் வரவேற்பை பெற்றார்.

தற்போது அவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அவர் முன்னறிவான் என்ற  படத்தில் நடிக்க உள்ளதாகவும், அந்த படத்தில் நடிகர் பரத் மற்றும் ஜனனி ஐயர், மிர்ச்சி செந்தில், இன்னும் பலர் நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். முன்னறிவான் படத்திற்கு பூஜை போட்ட புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Advertisement