சினிமா பிக்பாஸ்

எல்லாம் போச்சே.! பிரபல நடிகரிடம் கதறி அழுத சரவணன்.! மிக உருக்கமாக என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!

Summary:

saravanana cry with bharani after leaving bigboss house

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 43 நாட்கள் முடிந்துள்ள நிலையில் இதுவரை 5 பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இரவு யாரும் எதிர்பாராத வகையில் பருத்திவீரன் சித்தப்பு சரவணனை பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார் பிக்பாஸ்.

தான் பேருந்தில் பயணம் செய்யும் போது பெண்களை உரசியுள்ளதாக சரவணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இதற்கு அவர் மீது பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து பிக்பாஸ் அவரை மன்னிப்பு கேட்க கூறியிருந்தார். இந்த சம்பவம் நடந்து ஒருசில நாட்கள் ஆகிவிட்ட நிலையில்  இதே காரணத்திற்காக சரவணனை பிக்பாஸ் வீட்டிலில் இருந்து வெளியேற்றியுள்ளார் பிக்பாஸ்.இதனால் போட்டியாளர்களா கடும் வருத்தத்தில் உள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சரவணன், நடிகர் பரணியுடன் போனில் பேசியுள்ளார். அப்பொழுது எனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாதது போல தோன்றியது அதனால் என்னால் எந்த டாஸ்க்கிலும் ஈடுபட முடியவில்லை. வீட்டை விட்டுவெளியேற  எண்ணினேன். அதேபோல் நான் வெளியே வந்ததும் எனது குழந்தையின் உடல்நிலை சரியானது என்று கூறியுள்ளார்.

bigg boss bharani க்கான பட முடிவு

 மேலும் தனக்கு கெட்ட பெயர் வந்து விட்டதாகவும்,இதில் வரும் பணத்தை வைத்து புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம் என இருந்தேன் ஆனால் இவ்வாறு நடக்கும் என தெரிந்து இருந்தால் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று இருக்கமாட்டேன் என கூறி கதறி அழுதுள்ளார். மேலும் மன்னிப்பு கேட்ட ஒரு விஷயத்திற்காக அவரை வெளியேற்றுவது தொலைக்காட்சியின் ப்ரோமோவிற்காக என நடிகர் பரணி மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்
 


Advertisement