கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
சாய் பல்லவிக்கு அவசர திருமணமா.? வெளியான தகவலால் பரபரப்பு.!
கேரளாவைச் சேர்ந்த நடிகை சாய் பல்லவி விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பிரபலமடைந்தவர். அடுத்து இவர் மலையாளத்தில் "ப்ரேமம்" திரைப்படத்தில் அறிமுகமானார். இதன் தமிழ் பதிப்பிலும் மலர் டீச்சராக இவரே நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
தொடர்ந்து தமிழில் சூர்யா, தனுஷ் என்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் சாய் பல்லவி, தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது சிவ கார்த்திகேயனின் "எஸ் கே 21" படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், சாய் பல்லவி கழுத்தில் மாலையுடன் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. "தனது காதலனை கரம் பிடித்த சாய்பல்லவி, காதலுக்கு கண்ணில்லை என்று நிரூபித்து விட்டார்" என்று கேப்ஷனுடன் அந்த புகைப்படம் வைரலானது.
இந்நிலையில் அந்தப் புகைப்படம் "எஸ் கே 21" திரைப்படத்தின் பூஜை விழாவின் போது எடுக்கப்பட்டது என்றும், அருகில் இருப்பவர் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி என்றும் தெரிய வந்துள்ளது. குரூப் போட்டோவில் இருந்து இவர்கள் இருவரை மட்டும் எடிட் செய்தது தெரியவந்துள்ளது.