
பாரதி கண்ணம்மா ரோஷினிக்கு மனநிலை மாறி உடல்நல கோளாறு ஏற்பட்டதாக வதந்திகள் பரவி வந்தநிலையில், இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
தற்காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சினிமாக்களை விட சீரியல்களுக்கே பெருமளவில் ரசிகர்களாக உள்ளனர். மேலும் பலர் சீரியல்களுக்கு அடிமையாகவே உள்ளனர் என கூறலாம். ஒருநாள் பார்க்கவில்லை என்றாலும் அந்த எபிசோட்டை இணையத்தில் தேடிப் பார்க்கும் நிலையில் உள்ளனர்.
இவ்வாறு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்தத் தொடர் சமீப காலமாக நாளுக்குநாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யத்தைக் கூட்டும் வகையிலும் உள்ளது. இத்தொடரில் கண்ணம்மாவாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் மாடல் நடிகையான ரோஷினி. இந்நிலையில் தற்போது பாரதிகண்ணம்மா தொடரில் எட்டு வருடம் கழித்து காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ரோஷினி இரு குழந்தைகளுக்கு தாயாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரோஷினி அத்தகைய கதாபாத்திரத்துடன் மிகவும் ஒன்றி போனதால், மனநிலை மாறி நிஜ வாழ்க்கையிலும் என் குழந்தை எங்கே? என் குழந்தையை பார்க்க வேண்டும் என்று கூறி வருவதாக இணையத்தில் தகவல்கள் பரவியது. ஆனால் ரோஷினியிடம் இதுகுறித்து விசாரித்தபோது, அவர் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை எனவும், இது முற்றிலும் வதந்தி எனவும் விளக்கமளித்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
Advertisement
Advertisement