சினிமா

அட.. இதுதாங்க நடந்தது! புகார் அளித்த நடிகர் விஷால்! விளக்கமளித்து பிரபல தயாரிப்பாளர் கூறியதை பார்த்தீர்களா!!

Summary:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி.சௌத்ரி மீது காவல் நிலை

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி.சௌத்ரி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் அவர் இரும்புத்திரை படத்தயாரிப்புக்காக தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியிடம் கடன் வாங்கியதாகவும், அதற்காக தனது வீட்டுப் பத்திரம் மற்றும் உறுதிமொழி பத்திரங்கள் போன்ற சிலவற்றை ஆவணங்களாக கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் தான் வாங்கிய கடனை திருப்பி அளித்த பிறகும் ஆர்.பி.சௌத்ரி தனது உறுதிமொழி பத்திரங்களையும், ஆவணங்களையும் திருப்பித் தராமல் இழுத்தடிக்கின்றார். இதனை வைத்து பின்பு மோசடி செய்ய வாய்ப்பிருக்கிறது என  அந்தப் புகாரில் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து தற்போது தயாரிப்பாளர் ஆர்.பி  சௌத்ரி விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, இரும்புத்திரை படத்துக்காக விஷால் என்னிடமும், திருப்பூர் சுப்பிரமணியம் என்பவரிடமும் கடன் வாங்கினார். அது தொடர்பான ஆவணங்களை ஆயுதபூஜை படத்தை இயக்கிய சிவகுமார் கவனித்து வந்தார். 

ஆனால் இடையில் அவர் மாரடைப்பால் காலமானதால் அவரது பொறுப்பிலிருந்த ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. விஷால் கடனை திருப்பி தந்த போதே, பணத்தை பெற்றுக் கொண்டதாக நாங்கள் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்துள்ளோம். ஆனாலும் அந்த ஆவணங்கள் மூலம் எதிர்காலத்தில் பிரச்சனை வருமோ என விஷால் பயப்படுகிறார். நான் தற்போது வெளியூரில் இருக்கிறேன். சென்னை திரும்பிய பிறகு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Advertisement