
Ramya and shalini self quarantine bigboss show
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் நான்காவது சீசன் விரைவில் தொடங்கப்படும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் நான்காவது சீசன் ப்ரோமோ வீடியோக்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
மேலும் அதில் கேப்ரியலா, ரியா ராஜ், அனு மோகன், ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ், சனம் ஷெட்டி , ஷாலு ஷம்மு ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி நாராயணன் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தயாராகி வருவதாகவும், மேலும் அதற்காக அவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வது உறுதியாகியாகுவதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement