குக் வித் கோமாளி புகழுக்கு கல்யாணமுங்கோ.! பொண்ணு இவர்தானா! அவரே உடைத்த சீக்ரெட்!

குக் வித் கோமாளி புகழுக்கு கல்யாணமுங்கோ.! பொண்ணு இவர்தானா! அவரே உடைத்த சீக்ரெட்!pugazh-talk-about-his-love-and-marriage

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காமெடியான பேச்சால் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் புகழ். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது. அதைத் தொடர்ந்து புகழ் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 

மேலும் புகழின் உச்சிக்கே சென்ற அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வருகிறது. புகழ் விஜய் நடிப்பில் உருவாக்கியுள்ள பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது குக்வித் கோமாளி 3 சீசனிலும் கலந்து  கொண்டுள்ளார். முதல் வாரத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத அவர் தற்போது இரண்டாவது வாரத்திலிருந்து பங்கேற்று வருகிறார். இதனால் நிகழ்ச்சி கலகலப்பாக உள்ளது.

pugazh

இந்நிலையில் தற்போது புகழ் தனது காதல் குறித்து கூறியுள்ளார். எனது காதலியின் பெயர் பென்சி. நாங்கள் 5 வருடமாக காதலித்து வருகிறோம். அவரை எனக்கு கலக்கபோவது யாரு ஆடிஷனுக்கு போகும்போதே தெரியும் .அவர் தனக்கு அதிகமான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மேலும் இந்த ஆண்டில் நாங்கள் இருவரும் திருமணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாக புகழ் தெரிவித்துள்ளார்.