பிரியா பவானி ஷங்கர் இவரைத்தான் திருமணம் செய்ய போகிறாரா! புகைப்படத்துடன் பிரியா போட்ட பதிவு!priya lover photo

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானார் பிரியா பவானி சங்கர்.  சின்னத்திரையில் புகழின் உச்சிக்கு சென்ற ப்ரியா பின்னர்  வெள்ளித்திரைக்கு தாவினார்.அதனை தொடர்ந்து அவர் மேயாத மான் திரைப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம்,  எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர், அதர்வாவிற்கு ஜோடியாக குருதி ஆட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.அதனை தொடர்ந்து தற்போது பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். 

Priya bavani shanker

தற்போது  இந்தியன் 2 , மாபியா, களத்தில் சந்திப்போம்,கசட தபற என அடுத்தடுத்த படங்களில் பயங்கர பிசியாக நடித்துவருகிறார்.மேலும் இவர் அடிக்கடி தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வித்தியாசமான போட்டோஷூட்களை எடுத்து பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர். மேலும் இவருக்கு அதிக படியான ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.

இந்நிலையில் தற்போது தனது காதலருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை காதலன் பிறந்தநாள் அன்று வெளிட்டு அனைவர்க்கும் அறிமுகம் செய்துள்ளார்.இதோ அந்த அழகிய ஜோடியின் புகைப்படம்.