கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
நடிகை பிரியா பவானி சங்கர் தனது மகளுடன் கொடுத்துள்ள போஸை பாருங்கள்! வைரலாகும் புகைப்படம்.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் கதாநாயகியாக நடித்தவர் பிரியா பவானி சங்கர். அவர் நடித்த முதல் சீரியலிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானார்.
அதனை தொடர்ந்து பிரியா சின்னத்திரையில் இருந்து வெள்ளத்திரைக்கு சென்று அங்கு மேயாத மான் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திலும் நடித்தார்.
தொடர் வெற்றியை பார்த்த பிரியாவுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிய தொடங்கின. சமீபத்தில் கூட இவர் நடிப்பில் வெளியான மான்ஸ்டர் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இவர் தற்போது பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் நடிகை பிரியா 80 வயது பாட்டியாக கமலுக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது நடிகை பிரியா பவானி சங்கர் தனது சீரியல் மகளுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.