சினிமா

முதல் முறையாக இரட்டை பெண் குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்ட சின்னத்தம்பி புகழ் ப்ரஜின்:புகைப்படம் இதோ!

Summary:

prajin posted his child photo

மியூசிக் தொலைக்காட்சியின் தொகுப்பாளராக அறிமுகமானவர் ப்ரஜின். இது ஒரு காதல் கதை, அஞ்சலி, காதலிக்க நேரமில்லை, பெண் ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்னத்தம்பி என்ற தொடரில் நடித்து வருகிறார். 

தொடர்களில் நடித்துக்கொண்டே படங்களிலும் நடித்து வருகிறார். டிஷ்யூம், சுற்றுலா, மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய பல படங்களிலும் நடித்துள்ளார். எனினும், முன்னணி நடிகராக வரமுடியவில்லை. இவரைப் போன்றே இவருடைய மனைவி சாண்ட்ராவும் மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி கண்ணுக்குள் நிலவு, போராளி, 6 மெழுகு வத்திகள் என்று 10க்கும் அதிகமான தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார். அதைப் போன்று பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 

தொடர்புடைய படம்

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், 10 வருடங்களுக்குப் பிறகு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அன்னையர் தினத்தன்று முதல் முறையாக இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

என்னுடைய பொண்டாட்டிக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள். என்னுடைய மனைவிக்கு இரு அழகான தேவதையை கொடுத்த இறைவனுக்கு நன்றி. ஒரு குழந்தை பிறப்பதே கடினமாக இருக்கும் நிலையில், இரு தேவதைகளை கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் என்னை எப்படி கவனிக்கிறீர்கள் என்பதை நான் பார்க்கிறேன். நீங்கள் தான் எனக்கு அழகான குழந்தைகள். அக்கறை மற்றும் உணர்ச்சிமிக்க மனைவியோடு சூப்பரான அம்மா கிடைத்ததோடு, உங்கள் மூவரையும் கட்டியணைத்து அன்பு பாராட்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement