அட.. நடிகர் ரஜினிகாந்தின் புதிய கூலிங் கிளாஸை கவனிச்சீங்களா?இந்த திடீர் மாற்றத்திற்கு என்னதான் காரணம்? ஷாக்கில் ரசிகர்கள்!!

அட.. நடிகர் ரஜினிகாந்தின் புதிய கூலிங் கிளாஸை கவனிச்சீங்களா?இந்த திடீர் மாற்றத்திற்கு என்னதான் காரணம்? ஷாக்கில் ரசிகர்கள்!!


New cooling glass secret of actor rajinikanth

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் சினிமா ஷூட்டிங், அரசியல்வாதிகள் சந்திப்பு என பிஸியாக, ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இவ்வாறு போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியே வந்து நடிகர் ரஜினி நேற்று செய்தியாளர்களிடம்  பேசியது பல பரபரப்புகளை உருவாக்கியுள்ளது.

இதற்கிடையில் அவர் அணிந்திருந்த கூலிங் க்ளாஸும் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. திடீரென இப்படியொரு கூலர் கண்ணாடியுடன் ரஜினி வெளியே வருவதற்கு என்ன காரணம் என கேள்விகள் எழுந்த நிலையில் அதுகுறித்த தகவல்களும் பரவி வருகிறது.

rajinikanth

அதாவது நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் கண் அலர்ஜி காரணமாக மிகவும் அவதிப்பட்டு வந்ததாகவும், பின் அதற்கான சிகிச்சையை சமீபத்தில் அவர் மேற்கொண்டதாகவும், அதனாலே மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில், இவ்வாறு கூலிங் கிளாஸ் கண்ணாடியுடன் வெளியே வருகிறார் என தகவல்கள் பரவி வருகிறது.

rajinikanth