மொட்டை தலையுடன் நான் ஈ பட நடிகை! இப்படியொரு பிரச்சினையா! அதிர்ந்து போன ரசிகர்கள்!!
மொட்டை தலையுடன் நான் ஈ பட நடிகை! இப்படியொரு பிரச்சினையா! அதிர்ந்து போன ரசிகர்கள்!!

தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஹம்ச நந்தினி. இவர் பல திரைப்படங்களில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த நான் ஈ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் அவர் தான் மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில், அதனை கண்ட நெட்டிசன்கள் பதறி போயுள்ளனர். அதாவது நடிகை ஹம்ச நந்தினி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் அவருக்கு கீமோ தெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.
அதனால் அவருக்கு தலைமுடி கொட்ட துவங்கியுள்ளது. அதனால் அவரது தலைமுடியை அகற்றியுள்ளனர். இதுகுறித்து அவரே தன் சமூக வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.