மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தி, போலீசாரிடம் ரகளை.. பிரபல நடிகை அதிரடி கைது.. சோகத்தில் ரசிகர்கள்.!

மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தி, போலீசாரிடம் ரகளை.. பிரபல நடிகை அதிரடி கைது.. சோகத்தில் ரசிகர்கள்.!


Mumbai Hindi Model Actress Kavya Thapar Drunken Drive Accident Police Arrest

தமிழ் படத்தில் நடித்துள்ள ஹிந்தி மாடலிங் நடிகை, மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தி அதிகாரிகளுடன் ரகளை செய்ததால் கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்த நடிகை காவ்யா தாபர். இவர் மடலிங் துறையில் அடியெடுத்து வைத்து பின்னாளில் நடிகையாக வலம்வர தொடங்கினார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். 

தமிழ் மொழியில் வெளியான ராக்கெட் ராஜா என்ற படத்தில் நடித்துள்ள காவ்யா, இந்தி மொழியில் உள்ள பல்வேறு விளம்பரங்களில் நடித்துள்ளார். மும்பையில் வசித்து வரும் நடிகை, நேற்று அங்குள்ள ஜூகு பகுதியில் செயல்பட்டு வரும் நட்சத்திர விடுதிக்கு காரில் சென்றுகொண்டு இருந்தார். 

actress

அப்போது, அவரின் கார் எதிர்பாராத விதமாக சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் நேரில் சென்று விசாரணை செய்த போது, மதுபோதையில் இருந்த காவ்யா அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

மேலும், விசாரணைக்கு ஒத்துழைக்காமல் ரகளை செய்த நடிகை, ஒரு கட்டத்தில் பெண் அதிகாரிகளின் சீருடையை பிடித்து இழுத்து தாக்க முயற்சித்துள்ளார். இதனால் காவல் துறையினர் நடிகை காவ்யா தாபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.