அட்லீ, லோகேஷ் வரிசையில் இணைந்த நெல்சன் திலீப்குமார்; படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இன்ப அதிர்ச்சி.! Director Nelson Dilipkumar Launches New Production House 

 

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய படங்களை இயக்கி வழங்கியவர் நெல்சன் திலீப் குமார் (Nelson Dilipkumar). இவர் இயக்கிய 4 படங்களில் கோலமாவு கோகிலா திரைப்படத்திற்கு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, நார்வே தமிழ் திரைப்பட விருது ஆகியவை கிடைத்தன. 

இதில் விஜயுடன் பீஸ்ட் மற்றும் ரஜினியுடன் ஜெயிலர் ஆகிய படங்களில் வசூல் ரீதியாக மிகப்பெரிய இலாபத்தை தயாரிப்பு நிறுவனத்திற்கு வழங்கி இருந்தன. 

இந்நிலையில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி பலருக்கும் இன்ப அதிர்ச்சி வழங்கி இருக்கிறார். பிலமென்ட் பிக்சர்ஸ் (Filament Pictures) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள தயாரிப்பு நிறுவனம் குறித்து நெல்சன் எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

அந்த பதிவில், எனது 20 வயதில் இருந்து திரைத்துறையில் பணியாற்றி வருகிறேன். நான் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருந்தாலும், சில தயாரிப்பு நிறுவனங்களின் ஒத்துழைப்பு எனக்கு முழு உறுதுணையாக வெற்றியை படைக்க காரணமாக இருந்தது. 

ஆகையால், நானும் பலருக்கும் வாய்ப்பளிக்க விரும்பி தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறேன். மே 3ம் தேதி எனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை நான் அறிவிக்கிறேன்" என கூறியுள்ளார்.

இயக்குனர் அட்லீ, லோகேஷ் கனகராஜ் வரிசையில் தற்போது நெல்சனும் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.