சினிமா

முதன்முறையாக நயன்தாராவை சந்தித்தது இந்த இடத்தில்தான்.. மனம்திறந்த இயக்குனர் விக்னேஷ் சிவன்!! எங்கு தெரியுமா??

Summary:

முதன்முறையாக நயன்தாராவை சந்தித்தது இந்த இடத்தில்தான்.. மனம்திறந்த இயக்குனர் விக்னேஷ் சிவன்!! எங்கு தெரியுமா??

தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக, இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த நயன்தாரா, நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். பின்னர் 7 ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்கள் கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டு புதுமண ஜோடிக்கு வாழ்த்து கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் ராயப்பேட்டையில் உள்ள தாஜ் கிளப் ஹவுஸில்  செய்தியாளர்களை சந்தித்து நன்றி கூறினர்.

அப்பொழுது நயன்தாரா பேசுகையில், தாங்கள் அளித்த ஆதரவுக்கு மிக்க நன்றி. அனைவரது ஆசியும், ஆதரவும் எப்பொழுதும் வேண்டும் என கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன், இந்த நிகழ்வு நடைபெறக்கூடிய இந்த ஹோட்டலில் தான் நான் முதன்முதலாக கதை கூற நயன்தாராவை சந்தித்தேன். அதன் காரணமாகவே இந்த செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்வை இங்கு நடத்த விரும்பினோம் என கூறியுள்ளார்.


Advertisement