சினிமா

விஜய்யின் மாஸ்டர் படம் ரிலீஸ் எப்போ..? மாஸ்டர் ரிலீஸ் பற்றிய அசத்தல் அப்டேட்.!

Summary:

Master movie may release on vijays birthday date

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். விஜய்க்கு மிரட்டல் வில்லனாக விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, VJ ரம்யா, ஸ்ரீமன், நாசர் போன்றோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் பாடல்கள் வெளியாகி செம ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாவதாக இருந்த மாஸ்டர் படம் கொரோனா வைரஸ், ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியாவது தாமதமாகியுள்ளது.

தற்போது மே 3 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் படம் அதற்கு முன் வெளியாக வாய்ப்பில்லை. இந்நிலையில், ஜூன் மாதம் 22-ம் ஆம் தேதி விஜய் பிறந்தநாள் வருவதால் படத்தை விஜய்யின் பிறந்த நாள் அன்று வெளியிடலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து படக்குழு இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், ஊரடங்கு முடிந்ததும் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement