மன்மதன் இரண்டாம் பாகம் வர போகிறது...! ஹீரோ யார்??

மன்மதன் இரண்டாம் பாகம் வர போகிறது...! ஹீரோ யார்??



manmathan-part

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வரும் நடிகர் சிம்பு நடிப்பு, நடனம், பாடல் மற்றும் இசை என பல்வேறு திறமைகளை கொண்டவர் ஆவார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான மன்மதன் படத்தின் மூலம் இயக்குனராக திரைக்கு வந்தார். திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் சிம்புவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். சிம்புவுடன் இணைந்து ஏ. ஜி .முருகன் என்பவரும் இந்த படத்தில் இயக்குனராக பணியாற்றியிருந்தார். இந்நிலையில் தற்போது “மன்மதன்” படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக இயக்குனர் ஏ. ஜி. முருகன் கூறியுள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் முருகன் தெரிவிக்கையில், விரைவில் மன்மதன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க போகிறோம் என்றும் அந்த படத்தை சரவணன் தயாரிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சிம்பு தான் மீண்டும் ஹீரோவாக நடிக்க போகிறாரா இல்லையா என்பது தான் சந்தேகம். மற்றபடி இந்த படம் எடுப்பது உறுதி தான் என்றும் இயக்குனர் ஏ.ஜி முருகன் கூறியுள்ளார். நடிகர் சிம்பு தற்போது “மாநாடு” படத்திலும், சுந்தர் சி இயக்கிவரும் புதிய படத்திலும் கமிட் ஆகியுள்ளதால், “மன்மதன் 2” படத்தில் நடிப்பது கடினம் என்று கூறப்படுகிறது.