68 வயதில் முரட்டுத்தனமாக உடலை மாற்றிய நடிகர் மம்மூட்டி..! வைரலாகும் செம மாஸ் புகைப்படம்.!Mamootti latest look photo goes viral

68 வயதிலும் கட்டுமஸ்தான் உடம்புடன், முறுக்கேறிய தேகத்துடன் நடிகர் மம்மூட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

மலையாள சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் மெஹா ஸ்டார் மம்மூட்டி. மலையாள சினிமாவை அடித்தளமாக கொண்டிருந்தாலும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஒருகாலத்தில் புகழின் உச்சத்தில் இருந்திருந்தாலும் மம்மூட்டி சமீபகாலமாக மலையாள சினிமாவில் நடிக்கவில்லை என்ற ஒரு கருத்து நிலவி வந்தது.

Mamootti

மேலும் அவருக்கு அதிக வயதாகிவிட்டதால் அவர் சினிமாவில் இருந்து ஓய்வு பெறலாம் எனவும் பேச்சுக்கள் அடிபட்டது. இந்நிலையில் எப்படியாவது ஒரு பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்து விட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளாராம் நடிகர் மம்மூட்டி.

இந்நிலையில் தான் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்திற்காக கரடுமுரடாக உடலை ஏற்றி உள்ளார். 68 வயதிலும் முறுக்கேறிய உடம்புடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Mamootti