திரையுலகில் மேலும் ஒரு அதிர்ச்சி! திடீரென உயிரிழந்த பிரபல நடிகை!malaiyala-actress-lalitha-dead

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த கே.பி.ஏ.சி.லலிதா இயற்கை எய்திய தகவல் திரையுலககில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் கே.பி.ஏ.சி. லலிதா. பிரபல மலையாள இயக்குனர் பரதனின் மனைவியான இவர் 550 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை கே.பி.ஏ.சி.லலிதா தமிழில் காதலுக்கு மரியாதை, பரமசிவன், அலைபாயுதே, சினேகிதியே, மாமனிதன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

dead

மேலும் அவர் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது இரு முறையும், கேரள மாநில விருது 4 முறையும் அவர் பெற்றுள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு 
கொச்சினில் உள்ள மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று நள்ளிரவு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன் உள்ளிட்டோரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.