மருத்துவமனையில் இருந்து வேதனையுடன் மதுரை முத்து மனைவி வீடியோ.! ஏன்? என்னதான் ஆச்சு??madurai-muthu-wife-sad-video-from-hospital

சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் மதுரை முத்து. சிறுவயதிலிருந்தே மேடைப் பேச்சாளராக இருந்த அவர் பல பட்டிமன்ற நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்துள்ளார். மதுரைமுத்து லேகா என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் லேகா கடந்த 2016 ஆம் ஆண்டு  கார் விபத்தில் உயிரிழந்தார்.

மதுரை முத்து இரண்டாவது திருமணம் 

அதனை தொடர்ந்து தனது பிள்ளைகளுக்காக மதுரை முத்து சில மாதங்களிலேயே தனது மனைவியின் தோழியான நீத்து என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளநிலையில் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீப காலமாக நீத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகமான ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: விபத்தில் உயிரிழந்த முதல் மனைவி.! நினைவு நாளில் மதுரை முத்து போட்ட பதிவு!! இத்தனை வருஷமாச்சா..

madurai muthu

​​​​​​மருத்துவமனையில்  இருந்து வீடியோ 

சமீபத்தில் கூட அவர், எனக்குனு ஒரு உயிர் வேண்டும். அது என்னை மட்டுமே நேசிக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் ஏமாந்து கொண்டே இருக்கிறேன் என அழுதுகொண்டே ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் அவர் அண்மையில் மருத்துவமனையில் கையில் பேண்டேஜ் உடன் இருக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் யாரையும் முழுவதுமாக நம்ப வேண்டாம் என்றும், தான் பலருக்காக பல முறை இறங்கி வந்திருப்பதாகவும், பலருக்காக பேசி இருப்பதாகவும் அதில் வருத்தத்துடன் கூறியிருந்துள்ளார். 

இந்நிலையில் மதுரை முத்துவிற்கும் அவருடைய மனைவிக்கும் ஏதாவது பிரச்சனையா? அதனால்தான் அவர் இவ்வாறு வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறாரா? என நெட்டிசன் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

 

இதையும் படிங்க: வயசுக்கு கூட மரியாதை இல்லாம.. மதுரை முத்துவிடம் ஷிவாங்கி சொன்ன வார்த்தை! செம கடுப்பான ரசிகர்கள்!