விபத்தில் உயிரிழந்த முதல் மனைவி.! நினைவு நாளில் மதுரை முத்து போட்ட பதிவு!! இத்தனை வருஷமாச்சா..Madurai muthu post for his first wife death anniversary

சின்னத்திரையில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் மதுரை முத்து. சிறுவயதிலிருந்தே மேடைப் பேச்சாளராக இருந்த அவர் பல பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார். பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் தனது காமெடியான பேச்சால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து பிரபலமானார்.

மதுரை முத்து கலக்கப்போவது யாரு, அசத்தபோவது யாரு, காமெடி ஜங்ஷன், குக் வித் கோமாளி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். மதுரை முத்து லேகா என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு இரு பிள்ளைகள் இருந்தனர். இந்த நிலையில் லேகா கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கார் விபத்தில் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து சில மாதங்களிலேயே மதுரை முத்து தனது மனைவியின் தோழியான நீத்து என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

தனது குழந்தைகளுக்காகவே அவர் தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறியிருந்தார். இந்த நிலையில் மதுரைமுத்து அண்மையில் தனது மனைவியின் 8ஆம் ஆண்டு நினைவஞ்சலியை அனுசரித்துள்ளார். இந்நிலையில் நினைவுகளோடு..  என பதிவிட்டு மனைவியின் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.