வயசுக்கு கூட மரியாதை இல்லாம.. மதுரை முத்துவிடம் ஷிவாங்கி சொன்ன வார்த்தை! செம கடுப்பான ரசிகர்கள்!fans-angry-on-shivangi-for-talking-with-muthu

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் முதல் சீசனை விட இந்த சீசனுக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு காரணம் கோமாளிகள் செய்யும் ரகளைகள்தான். மேலும் அவர்களுடன் சேர்ந்து போட்டியாளர்கள் செய்யும் அட்ராசிட்டியும் வேற லெவல். 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது பாபா பாஸ்கர், ஷகிலா, அஸ்வின், கனி,பவித்ரா ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளனர். மேலும் இதுவரை  மதுரை முத்து, தர்ஷா, ரித்திகா மற்றும் கடந்த வாரம் பவித்ரா ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர். மேலும் கோமாளிகளாக பாலா, புகழ், ஷிவாங்கி, மணிமேகலை, சுனிதா, சரத் அலப்பறை கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த வாரம்  நிகழ்ச்சியில், பாலா சரத்தை பார்த்து பாடல் எதாவது பாடுங்க என்று கூறியுள்ளார். அதற்கு ஷிவாங்கி அஷ்வின் பாடுவார் என்று கூறினார். அப்போது மதுரை முத்து ஷிவாங்கியை பார்த்து நீ 7 கட்டைல பாடு, சரத் வெளக்குமாத்து கட்டைல பாடுவார் என்று சொல்லியுள்ளார். உடனே ஷிவாங்கி சற்றும் எதிர்பாராத நிலையில் தொடப்ப கட்டையை எடுத்து அடிச்சிடுவேன் என்று கூறியுள்ளார். 

shivangi

இதை கேட்டதும் மதுரை முத்துவின் முகம் மாறியது. உடனே டிஜே எள்ளு வய பூக்களையே என்ற பாடலை போட்டுள்ளார். மேலும் மற்றவர்களும் சிரித்து அதனை காமெடியாக மாற்றியுள்ளனர். இந்நிலையில் அதனை கண்ட சிலர் ஏதோ ரைமிங்கில் தெரியாம சொல்லிவிட்டார் எனவும் சில ரசிகர்கள் அவரது வயசுக்கு கூட மரியாதை கொடுக்காம இப்படியா பேசுவது? கொஞ்சம் பாத்து பேசுங்க எனவும் அறிவுரை கூறியுள்ளனர்.