சினிமா

ஓடிடியில் வெளியாகிறதா மாதவனின் மற்றுமொரு திரைப்படம்! தீயாய் பரவிவரும் தகவல்!

Summary:

Madhavan maara movie going to released in OTT

கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் மார்டின் ப்ராகாட் இயக்கத்தில்  துல்கர் சல்மான், பார்வதி மேனன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சார்லி. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் அந்த திரைப்படம்  தற்போது தமிழில் மாறா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் விக்ரம் வேதா திரைப்படத்தில் ஜோடியாக நடித்த மாதவன் மற்றும் ஸ்ரத்தா கபூர் மீண்டும் ஜோடியாக  இணைந்துள்ளனர். இப்படத்தை திலீப்குமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில்,  கொரோனா ஊரடங்கால் தியேட்டர் மூடப்பட்ட நிலையில் படம் ரிலீசாவது தள்ளிப்போனது. அதனைத் தொடர்ந்து தற்போதும் தியேட்டர்கள் திறக்கப்படுவது குறித்த எந்த தகவலும் வெளிவராத நிலையில், படத்தை ஓடிடி  தளத்தில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement