தளபதி 67 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா.?

தளபதி 67 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா.?



Lokesh kanagaraj salary for Thalapathi 67 th movie

தமிழில் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ். அவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி, தளபதி விஜயை வைத்து மாஸ்டர் என தொடர் சூப்பர் ஹூட் படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது இவர் உலகநாயகன் கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் சில தினங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியாகி ஹிமாலய உச்சத்தை வசூலில் தொட்டுள்ளது. தொடர்ந்து நான்கு படத்திலும் வெற்றியை பதித்துள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக மீண்டும் தளபதி விஜய்யுடன் தளபதி 67 படத்தில் கைகோர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

lokesh kanagaraj

விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது புதிய தகவலாக தளபதி 67 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் 10 கோடி சம்பளம் வாங்கவுள்ளதாக தகவல் கசிந்து வருகிறது.