சினிமா

இயக்குனர் அட்லீக்காக லோகேஷ் கனகராஜ் என்ன செய்துள்ளார் பாருங்கள்! வைரலாகும் புகைப்படம்!

Summary:

Logesh Kanagaraj posted Common DB for Atlee Birthday

இயக்குனர் அட்லியின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுவான புகைப்படம் ஒன்றினை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் அட்லி ராஜா ராணி திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து தளபதி விஜயுடன் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து மூன்று மெகா ஹிட் படங்களை கொடுத்துள்ளார் அட்லி.

இப்படி தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்துவந்த இயக்குனர் அட்லி அடுத்ததாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் அப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் தனது 34வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார் இயக்குனர் அட்லி. அட்லிக்கு சினிமா பிரபலங்கள் உட்பட அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தளபதி விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியுள்ள அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் அட்லீயின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுவானப் ரொபைல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Advertisement