"Keep calm and plot your escape" வைரலாகும் லியோ பட கன்னட போஸ்டர்..

"Keep calm and plot your escape" வைரலாகும் லியோ பட கன்னட போஸ்டர்..


leo-movie-cannada-poster-viral

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Lokesh

மேலும் இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மிஸ்கின், அர்ஜுன், கௌதம் மேனன் சில முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் தெலுங்கு போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

'லியோ' படத்தின் முதல் பாடல் வெளியாகி தற்போது வரை யூடியூப்பில் வியூஸ்கள் அதிகமாக வருகின்றன. இதனை அடுத்து இரண்டாம் பாடல் வெளியாகவுள்ள நிலையில் தற்போது லியோ படத்தின் கன்னட போஸ்டர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

Lokesh

அந்த போஸ்டரில் "kalm and plot your escape" என்ற வாசகங்களுடன் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரை தமிழ் ரசிகர்களும் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர். மேலும் இது போன்ற அப்டேட்டுகளால்  படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாகி வருகிறது.