ஜப்பான் நிறுவனத்தின் முதல் இந்தியத் தூதரான தமன்னா.!



Latest news about tamanna

2006ம் ஆண்டு "கேடி" திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தமன்னா. இவர் மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையை பூர்வீகமாக கொண்டவர். தமிழ், தெலுங்கு ஹிந்தி என எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள தமன்னா, கலைமாமணி மற்றும் சைமா விருதுகளையம் வென்றுள்ளார்.

tamanna

தமிழில் விஜய், அஜித், ஜெயம் ரவி, கார்த்தி, சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ள தமன்னா, தற்போது ஹிந்தி வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான "ஜெயிலர்" படத்தில் "காவாலா" பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் தமன்னா.

மாடலிங் தொழிலும் வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார் தமன்னா. மேலும் சந்திரிகா ஆயுர்வேத சோப்பு, பேண்டா போன்ற விளம்பரங்களிலும் நடித்துள்ளார். மேலும் அழகு சாதன பொருட்களின் ப்ராண்ட் அம்பாசிடராகவும் உள்ளார்.

tamanna

இந்நிலையில் தற்போது தமன்னா, "ஷிஷீடோ" என்ற ஜப்பான் நிறுவனத்தின் அழகு சாதனப் பொருட்களின் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் இந்தியத் தூதர் தமன்னா தான் என்பது குறிப்பிடத்தக்கது