16 வயதிலேயே தொழிலதிபரான பிரபல நடிகரின் மகள்.! உற்சாகத்துடன் வாழ்த்து கூறிய நடிகை.!

16 வயதிலேயே தொழிலதிபரான பிரபல நடிகரின் மகள்.! உற்சாகத்துடன் வாழ்த்து கூறிய நடிகை.!


kushbu sundar daughter became a business women

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அடியெடுத்து வைத்து, வருஷம் 16 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை குஷ்பு. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும்  இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும்  கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்த இவர் நடிகரும் ,திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார்.அதனை தொடர்ந்து தற்போது சின்னத்திரை தொடர்களிலும்  நடித்து வருகிறார்.

           Sundar c

குஷ்பு மற்றும் சுந்தர் சி தம்பதியினருக்கு அவந்திகா, அனந்திட்டா என   இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் 16 வயதே ஆகும் குஷ்புவின் இளையமகள் அனந்திட்டா தன்னுடைய நண்பர் ஜைனா ஃபாஸல் என்பவருடன் இணைந்து இணையதளத்தில், அழகு சாதன பொருட்கள், கீரிம், உள்ளிட்டவை விற்பனை செய்யும் சமூக வலைத்தளத்தை துவங்கியுள்ளார். மேலும் அதற்கு "ANMOL " என பிராண்ட்  பெயர் வைத்துள்ளார். 

இந்நிலையில் அவரை ஊக்குவிக்கும் வகையில் நடிகை குஷ்பு தன்னுடைய மகளுக்கு வாழ்த்து தெரிவித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவள் எங்கள் பெருமை, எங்கள் குழந்தை.. அவள் தற்போது சிறகு விரித்து பறக்க துவங்கிவிட்டால் மேலும் பெற்றோராக நங்கள் அன்புடன் எப்பொழுதும் ஆவலுடன் நிற்போம் என கூறி மகிழ்ச்சியுடன் தன்னுடைய வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.