சினிமா

"அந்த நாளை மறக்கவே முடியாது" கேக் வெட்டி கொண்டாடிய குஷ்பூ! அப்படி என்ன நாள் தெரியுமா?

Summary:

kushbu celebrates proposal date with sundar c

1990களில் தமிழ் சினிமா மற்றும் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருந்தவர் நடிகை குஷ்பு. இவர் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இவர் 1989ஆம் ஆண்டு வருஷம் பதினாறு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் 2000 ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி இயக்குனர் மற்றும் நடிகருமான சுந்தர்.சி-யை திருமணம் செய்து கொண்டார். சுந்தர் சி ஆரம்ப காலத்தில் இயக்குனர் மற்றும் நடிகருமான மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

இவர் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு முதலில் வெளியான  வெளியான திரைப்படம் முறைமாமன். இந்த படத்தில் ஜெயராம், குஷ்பு, கவுண்டமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தன்னுடைய முதல் படத்திலேயே குஷ்புவை வைத்து இயக்கிய சுந்தர் சி படப்பிடிப்பின்போதே தன்னுடைய காதலையும் வெளிப்படுத்தியுள்ளார்.

1995-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி முறைமாமன் படப்பிடிப்பு நடைபெற்ற சமயத்தில் சுந்தர்சி எந்தவித படபடப்பும் இல்லாமல் எதார்த்தமாக தன்னுடைய காதலை குஷ்புவிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். தற்பொழுது இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் குஷ்பூ தங்களுடைய திருமண நாளை போன்றே, சுந்தர்சி முதலில் தன்னிடம் காதலை வெளிப்படுத்திய தினமான பிப்ரவரி 22ஆம் தேதியை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். நேற்று நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தின் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகை குஷ்பு. 


Advertisement