ரஜினி குறித்து குஷ்பூ வெளியிட்ட ஒத்த புகைப்படம்.! தாறுமாறாக வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! இதுதான் காரணமா?

ரஜினி குறித்து குஷ்பூ வெளியிட்ட ஒத்த புகைப்படம்.! தாறுமாறாக வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! இதுதான் காரணமா?


kushboo teased by netisans for wrong tweet

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை குஷ்பூ. மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது தமிழ் பெண்ணாகவே மாறிவிட்டார். ரஜினி, கமல்,பிரபு என பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் .

மேலும் வெள்ளித்திரையில் அசத்தி வந்த குஷ்பூவின் கவனம் சின்னத்திரை பக்கம் திரும்பியது. அதன்படி ஏராளமான தொடர்களில் நடித்தார். மேலும் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

kushboo

இவ்வாறு பிஸியாக இருக்கும் குஷ்பூ லண்டன் ஆக்ஸ்போர்டு நகரில் ஷாப்பிங் செய்தபோது ரஜினிகாந்த் புகைப்படத்துடன் மொபைல் கவர்களை பார்த்ததாக புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் வைரலாக நிலையில் அதனை கண்ட நெட்டிசன்கள் அது ரஜினி இல்லை எனவும், அது கத்தாரின் எமிர், தமீம் பின் ஹமாத் என்பவரது புகைப்படம். எனவும் புகைப்படங்களை வெளியிட்டு குஷ்பூவை மோசமாக விமர்சனம் செய்துள்ளனர்.

அதனை தொடர்ந்து குஷ்பூ சரிஅது ரஜினிகாந்த் இல்லை. எனது தவறை  திருத்தியதற்கு எனது நல்ல நண்பர்களுக்கு நன்றி. ஒரு தவறை ஏற்றுக்கொள்வது நாம் வளரத் தயாராக இருப்பதைக் காட்டுகிறது, தவறுகளிலிருந்து கற்றல், மனிதநேயம் மனிதனாக உருவாக்குகிறது என தனது தவறை ஏற்றுக்கொண்டுள்ளார்.