KGF ராக்ஸ்டாருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது!! வைரலாகும் செம கியூட் புகைப்படம்.! கொண்டாடும் ரசிகர்கள்!!



kgf-yash-blessed-with-male-baby

கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் யஷ். தமிழ் சினிமாவில்  அவரது நடிப்பில் வெளிவந்த வந்த திரைப்படம் KGF . இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று,வசூலிலும் சாதனை படைத்தது. மேலும் நடிகர் யஷ் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது  KGF படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுவருகிறது.

நடிகர் யஷ் கடந்த 2016 ல் ராதிகா பண்டிட் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்த அழகிய தம்பதியினருக்கு 2018 ல் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அவர்கள் ஆர்யா யாஷ் என பெயரிட்டு இருந்தனர். அதனை தொடர்நது ராதிகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். 

      yash

இந்நிலையில் அந்த காதல் ஜோடியினருக்கு இரண்டாவது குழந்தையாக தற்போது அழகிய ஆண்குழந்தை பிறந்துள்ளது. அதனை தொடர்ந்து தனது குழந்தையின் பிஞ்சுவிரல்களை பிடித்தவாறு புகைப்படம் ஒன்றை யஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை தொடர்ந்து ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

yash