புது அவதாரம் எடுக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்! சந்தோசத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னை நாயகிகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் கீர்த்தி சுரேஷ். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் வரிசையாக நடித்தார் கீர்த்தி சுரேஷ்.
இருத்தியாக விஜய்க்கு ஜோடியாக சர்க்கார் படத்தில் நடித்திருந்தார். வெறும் காதல், டூயட் இவற்றை தாண்டி நடிப்புக்கும் முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.
சர்க்கார் படத்தை அடுத்து ஓய்வெடுத்து வரும் கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக பாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற Badhaaai Ho படத்தின் இயக்குனர் அமித் சர்மா இயக்கத்தில்தான் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளாராம்.
இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.