சினிமா

அட.. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கவின் என்ன செய்யபோகிறார் தெரியுமா? வெளியான புதிய தகவல்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெரும

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் கவின். அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பரிச்சயமானார். கவின் வெள்ளித்திரையிலும் களமிறங்கி நட்புனா என்னா தெரியுமா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் தற்போது ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் லிஃப்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. 

இந்நிலையில் லிப்ட் படத்தை தொடர்ந்து நடிகர் கவின், அடுத்ததாக வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அந்த வெப்தொடருக்கு ஆகாசவாணி என பெயரிடப்பட்டுள்ளதாம். இதனை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆகாசவாணி வெப் தொடரில் நடிக்க நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வெப்தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement