உச்சகட்ட கோபத்துடன், கவினை பளாரென அறைந்த அவரது நண்பர்.! கலவரமான பிக்பாஸ் வீடு!! ஷாக் வீடியோ இதோ..



kavin friend slap him viral video

பிக்பாஸ் சீசன் மூன்று 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு, மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்ஷண், வனிதா ஆகியோர் மட்டுமே உள்ளனர் . மேலும் கடந்த வாரம் சீக்ரட் ரூமில் அடைக்கப்பட்ட சேரன் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர பலருக்கும் சந்தோசம் ஏற்பட்டது. 

இந்நிலையில் நேற்றைக்கு முந்தையநாள் முதல் புதிய டாஸ்க் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர்.

bigbossஅதன்படி நேற்றைக்கு முதல்நாள் முகேன் மற்றும் லாஸ்லியாவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.அதனை தொடர்ந்து நேற்று தர்சன், வனிதா மற்றும் சேரன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்தனர்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் கவினின் நண்பர் வருகை தந்துள்ளார். அவர் கவினிடம் அறிவுரை கூறி திட்டியுள்ளார். பின்னர் யாரும் எதிர்பார்க்காதபோது கவினை பளாரென அறைந்துள்ளார். இது போட்டியார்களுக்கு மட்டுமின்றி பார்வையாளருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.