சர்ச்சை நாயகி கஸ்தூரி செய்த அசத்தலான செயல்!! பாராட்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!! புகைப்படம் இதோ..

சர்ச்சை நாயகி கஸ்தூரி செய்த அசத்தலான செயல்!! பாராட்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!! புகைப்படம் இதோ..


Kasthuri wish abdul kalam birthday

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பல உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து தற்போது முன்னணி ஹீரோயினாக இருப்பவர் நடிகை கஸ்தூரி.  இவர் எப்பொழுதும் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்ககூடியவர். மேலும் இவர் சமூகத்தில் நடக்கும் பல விசயங்களுக்கு எதிராகவும், அரசியலில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும் தயக்கமின்றி குரல் கொடுத்து பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளார்.

 மேலும்  பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி  மூலம் கலந்து கொண்ட அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததுமே பல சர்ச்சைகள் கிளம்பும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அமைதியாகவே இருந்து வந்தார். மேலும் அதனால் பல விமர்சனங்களையும் பெற்றார்.
 அதுமட்டுமின்றி நிகழ்ச்சிகள் குறித்தும் அவர் அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

Abdul kalam

 

 இந்நிலையில் நேற்று இந்தியா முழுவதும் விஞ்ஞானி அப்துல்கலாம் ஐயா அவர்களின் பிறந்த நாள் அனைவராலும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கஸ்தூரி ராமேஸ்வரத்தில் கலாம் ஐயா சமாதிக்குச் சென்று அவரை வணங்கியுள்ளார். மேலும் அவரது குடும்பத்தாரையும் சந்தித்து பேசியுள்ளார். இந்த புகைப்படங்களை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் கஸ்தூரியை பாராட்டி வருகின்றனர்.

o