தனது குடும்பத்தினருடன் செம ஹேப்பியாக பிறந்தநாளை கொண்டாடிய உலகநாயகன்.! யாரெல்லாம் இருக்காங்க பாத்தீங்களா!! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!Kamalhaasan celebrating birthday with his family

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் 1960ஆம் ஆண்டு வெளிவந்து பிரபலமான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக, நடித்தததன் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.  அதனைத் தொடர்ந்து அவர் பல்வேறு கதாபாத்திரங்களிலும் ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டு திரைத்துறையின் ஜாம்பவனாக விளங்கி வரும் இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். கமல்ஹாசன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம்,கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். பன்முக திறமை கொண்ட அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியினையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

 இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று தனது 68 ஆவது பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.  அதனை முன்னிட்டு அவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கமல்ஹாசன் தனது அண்ணன் சாருஹாசன், அண்ணி கோமளம் மற்றும் அண்ணன் மகள்களாகிய நடிகைகள் சுகாசினி, அனுதாசன் இயக்குனர் மணிரத்னம் ஆகியோருடன் தனது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடியுள்ளார். அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.