சினிமா பிக்பாஸ்

லாஸ்லியாவிடம் கண்டிப்போடு நடந்துகொண்ட தந்தை.! அதிர்ச்சியில் உறைந்து கமலே என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!

Summary:

kamal talk about losliya father

 பிக்பாஸ் சீசன் மூன்று 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு, மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்ஷண், வனிதா ஆகியோர் மட்டுமே உள்ளனர் . மேலும் கடந்த வாரம் சீக்ரட் ரூமில் அடைக்கப்பட்ட சேரன் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர பலருக்கும் சந்தோசம் ஏற்பட்டது. 

இந்நிலையில் நேற்றைக்கு முந்தையநாள் முதல் புதிய டாஸ்க் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் 10 வருடங்கள் கழித்து லாஸ்லியாவின் தந்தை தனது மகளை காண பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளார். 

மேலும் அவர் வரும்போதே மிகவும் கோபத்துடன் வந்துள்ளார். பின்னர், அனைத்து போட்டியாளர்களின் முன்பும் லாஸ்லியாவை நிறுத்தி, மற்றவர்கள் காறி துப்புகிறார்கள். இதற்காகத்தான் இங்கு வந்தியா? எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு உள்ளே வா என கோபத்துடன் பேசி கடுமையாக கண்டித்துள்ளார்.. பின்னர் அமைதியாகவும் தனது மக்களுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார். 

இந்நிலையில் இன்று பேசிய கமல் சிறந்த தந்தையாக லாஸ்லியாவை கண்டித்து அறிவுரை கூறிய லாஸ்லியாவின் தந்தையை பாராட்டி பேசியுள்ளார். அந்த பிரமோ வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement