சினிமா

நம் அலட்சியம் ஆபத்தாகிவிட கூடாது ! நடிகர் கமல் விடுத்த அன்பான வேண்டுகோள்!

Summary:

Kamal request people to be careful from corono

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவிவந்த நிலையில் நாளுக்கு நாள் பாதிப்புகள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வந்தது. இந்நிலையில் கொரோனோ பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடுமையான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் இத்தகைய ஊரடங்கால் பலரும் வருமானம் இழந்து  பொருளாதார ரீதியாக பெருமளவில் பாதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டது.இந்நிலையில் மக்கள் அலட்சியம் இல்லாமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தளர்வுகளைத் தொடர்ந்து நாம் வெளி வரும்போது, நம் உயிருக்கும் உறவுகளுக்கும் நம் அலட்சியம் ஆபத்தாகி விடக்கூடாது. மருந்தே இல்லாத இந்நோயில் இருந்து, நம் வாழ்முறையும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே, நமைக் காத்திடும் என அறிவுரை வழங்கி பதிவிட்டுள்ளார். 


Advertisement